முதல் கையெழுத்து

தேர்தல் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர்:
பெரியோர்களே, தாய்மார்களே, தாய்க் குலமே, இளைஞர்களே, மாணவச் செல்வங்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம்.
நடைபெற உள்ள பொதுத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். காலத்தின் கட்டாயம் கருதி எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் நாங்கள் நிறைவேற்றவுள்ள திட்டங்களை ஏற்கனவே அறிவித்துவிட்டோம். இன்று பிரச்சாரத்தின் கடைசி நாள். இன்னும் பத்து நிமிடமே உள்ளது. எனது உரையை முடிக்கும் கட்டாயத்தில் உள்ளோம். நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களின் உணர்வை மதிக்கும் வகையில் எங்கள் கட்சி வெற்றி பெற்று பதவி ஏற்றவுடன் எனது முதல் கையெழுத்து ஆரசு சோதிடரை நியமிக்கும் உத்தரவு தான். நீங்கள் காலை எழுந்தவுடன் பார்க்கும் சின்னமே எங்கள் சின்னம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நன்றி. வணக்கம்.

எழுதியவர் : மலர் (5-Oct-23, 9:52 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : muthal kaiyezhuthu
பார்வை : 86

மேலே