தொண்டர்களுக்கு பரிசு மழை
எனது ஆருயிர் தொண்டர்களே,
நமது கட்சியின் பெரிய வளர்ச்சிக்கு நமது சாதனைகளைவிட நமது தலைவர் நமக்கு அளித்த பயிற்சியே முக்கிய காரணம். அரசியலில் பொய்யே வெல்லும்.
காலத்தை வென்று நிற்கும் பொய்களை மக்கள் உண்மை என்று நம்பும்படி பேசும் தலைவர் நம் தலைவர் மட்டுமே. பின்னர் எதிர் கட்சியினர் யாராவது சுட்டிக் காட்டி விமர்சனம் செய்தால் "எங்கள் தலைவர் அது போல சொல்லவில்லை" என்று நமது கட்சிப் பேச்சாளர்களும் செய்தித் தொடர்பாளர்களும் மறுப்புத் தெரிவித்து செய்தி வெளியிடுவார்கள்.
மக்கள் நாம் சொல்வதைத்தான் நம்புவார்கள். ஊடகங்கள் நமக்கு ஆதரவு.
உங்களுக்கு ஒரு இனிய செய்தி: பரிசு மழை.
அதிகாரப்பூர்வமாக நம் தலைவர்கள், பேச்சாளர்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் வெளியிடும் பொய்கள், அவதூறுகள் வதந்திகளை நீங்கள் பகிர்ந்தளிக்க வேண்டுகிறேன். ஒரு பகிர்வுக்கு பத்து ருபாய் உங்கள் வங்கி 🏦 கணக்கில் ஏறும். தரமான பொய், வதந்தி, அவதூறு ஆகியவற்றை நீங்கள் உருவாக்கி தலைமை நிலையத்திற்கு அனுப்பி ஒவ்வொரு பொய், வதந்தி மற்றும் அவதூறுக்கு ஆயிரம் ரூபாய் உங்கள் வங்கிக் கணக்கில் சேரும்.
யாராவது மானநட்ட வழக்கு தொடர்ந்தால் அதை நம் வழக்குரைஞர் குழு பார்த்துக் கொள்ளும். நீங்கள் மன்னிப்புக் கேட்டுவிட்டால் போதும்.
தொடரட்டும் உங்கள் பணி. வளரட்டும் நமது கட்சி.
அன்புடன்,
கருங்கால் கலையரஜன்
பொதுச்செயலாளர்
ஆ.கு.செ.ஆ. க