புதிதாய்நீ பொன்னிலாப் போல்

அதிசய வானம் அந்திராகம் பாடிட
கதிரொளி தீட்டுது ஓவியம் மஞ்சளழகில்
மதிமுகம் காட்டுது மற்றுமோர் மஞ்சலோவியமாய்
புதிய பூமிநிலவு உன்னை பொறாமையில் பார்க்குது

அதிசய வானமோர் அந்திராகம் பாட
கதிரொளி பொற்சித் திரம்வானில் தீட்ட
மதிமுகம் காட்டுது மற்றுமோர் பொன்னாய்
புதிதாய்நீ பொன்னிலாப் போல்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Oct-23, 9:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 129

மேலே