என் பேரழகு பெண்மயிலே 555

***என் பேரழகு பெண்மயிலே 555 ***


என் பெண்மயிலே...


மாலைநேர பொழுதில்
மலையடிவாரத்தில்...

அழகு மயில்கள் தோகை
வி
ரித்தாடும் நேரத்தில்...

என் பெண்மயிலே நீ
ஏன் அங்கு சென்றாய்...

நீயும்
தோகைவிரித்தாட சென்றாயோ...

கா
ய்ந்து கிடக்கும் பூமியில்
உன் பாதம் பட்டால்...

மண்ணில் புதைந்த விதைகள்
எல்லாம் புத்துயிர் பெறும
டி...

வளர்ந்து
நிற்கும் தென்னையும்...

பாலைவிடும்
உன் பாதம் பட்டால்...

மலைப்பாறைகளிலும்
நீர் சுரக்கும்...

என்னுயிரே உன்
பார்வை பட்டால்...

வயலில்
நடைபோடும் உன்னோடு...

வா
ழ்க்கை
நடைபோட காத்திருக்கிறேன்...

உன் இதழ்கள் விரித்து
நீயும் சம்மதம் சொன்னால்...

வாழைமரம் கட்டுவேன்
என் வீட்டு வாசலில்...

என் விழிகளை நேருக்குநேர்
சந்தித்
து பதில் சொல்லடி...

அழகு மயிலாடு நடைபோடும்
பேரழகு என் பெண்மயிலே.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (28-Oct-23, 7:08 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 260

மேலே