என்னவளே
என் குறை தேடாமல்
நிழல் தரும் குடை ஆனாள்
என் விழியில் தேடாமல்
மனதை படம் பிடித்தாள்
என் அழகை தேடாமல்
அன்பினை மணமுடிதாள்
என்னை உழாமல்
உள்ளத்தில் கொய்தாள்
என்னை தோற்கடிக்காமல்
தொடர் யுத்தம் செய்வாள்
என்னை கேட்காமல்
எனக்காய் வள்ளலானாள்
என் சாமியாய்
எனக்காய் வரமானாள்
என்னவள் என்னவளே
எல்லையில்லா ஈர்ந்தவளே
என்னை நுகர்ந்தவளே
என்னை பூறித்தவளே
என்னை நினைவில்
கனவில் கண்ணில்
கவிதையில் இதயத்தில்
உயிரினில் காதலினால்
வலியில்லாமல் அழகாய்
தைத்தவளே..
உன்னை என்னவென்று
அதிசயிக்கும் அதிசயமே
அந்தமும் ஆதியும்
இல்லாத அதிகாரமே
தமிழ் கொஞ்சும் என்னவளே
நான் கெஞ்சும் என்னை மிஞ்சும்
என் வார்த்தைகள்
என் இனியவள்
என்னவளே.....
...