கைபேசி மச்சான்

கைபேசி மச்சான்
மனசில வலய வெச்சான்
மீசை ஊசி வச்சு
உதட்டில முத்தம் தெச்சான்

இடைவெளி வெண்டாமின்னு
கஞ்சன் நெஞ்சில் முழு நிலவ
புதச்சு வெச்சான்

இடையில் தூக்கி எடை இல்லா
விடை நீ தானுண்ணு
சேர்தணச்சான்

கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம
காதலை முழுசா கொட்டுரயே

தள்ளி போக வேனமின்னு கழுத்திலே கொடியா தொங்கிரயே..
கைபேசி மச்சான்
கண்ணால் பேசி மச்சான்

எழுதியவர் : Rak தென்றல் (28-Oct-23, 2:56 pm)
சேர்த்தது : rskthentral
Tanglish : kaipesi machan
பார்வை : 41

மேலே