சாவியில்லாத பூட்டு
கனவினை திருடாமலிருக்க
கண்களை பூட்டியது உறக்கம்
நிலா உலாவர
சூரியனை பூட்டியது இரவு
காலம் தொடர இறந்தகாலத்தை பூட்டியது நிகழ்காலம்
கண்கள் பேசிட
உதடுகளை பூட்டியது மௌனம்
நிஜங்களை காண
பொய்யை பூட்டியது மெய்
சினம் ஆறிட
செயலை பூட்டியது நிதானம்
மழலை ரசிக்க
சினத்தை பூட்டியது பொறுமை
அமைதி நிலவ
ஆசையை பூட்டியது அறிவு
காதலியை ரசிக்க
காதலனை பூட்டியது காதல்
இதை ரசிக்க
உன்னை பூட்டியது என் கவிதை