சின்ன சின்ன யானை

"சின்ன சின்ன யானை
சிலுங்க வைக்கும் யானை
கூட்டுக்குள்ள யானை
கூடி பாடும் யானை
சிங்கார குரலு யானை
ஒய்யார நட யானை
பாப்பாவுக்கு பிடிக்கும் யானை
பம்பரமா சுழலும் யானை
கட்டி பிடிக்கவும் முடியாது
கட்டி போடவும் முடியாது
கேரளா வீட்டு யானை
கதகளி ஆடும் யானை
கண்ணழகு யானை
காலாட்டும் யானை
கொள்ளையழகு யானை
கொலுவிலிருக்கும் யானை"

எழுதியவர் : சு.சிவசங்கரி (1-Nov-23, 6:13 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
Tanglish : sinna sinna yaanai
பார்வை : 51

மேலே