காணாது அமைவில காண்

காணாது அமைவில காண்
××××××××××××××××××××××××
மழையோடு கலந்து
குமிழாகும் காற்றாக
உழைப்பாளியை நோக்கிட
உதயமானது காதலுமே

பிறை சூடியே
பார்நிறை வானாக
நிறை மனதால்
நினைவானாய் மன்னவனே

துணிச்சலாக இமைகள்
துடிதுடித்து உரையாட
அனிச்சைச் செயலாக
அந்நியரே உறவானீர்

மனமும் இணைந்திட
மணமும் இணைவிழவாக
தினமும் இனியநிலா
தித்திக்க இனித்தனவே

வணிகம் செய்தே
வருமானம் ஈட்டிட
அண்டை நாட்டுத்
தரகனிடம் போனவரே

கதிரவன் தலைசாய்க்க
காரிருள் புவிசூழ
துதியோடு வண்டுகளும்
துணைகளை அழைத்திடும்

வேளை வந்தபோதும்
வேலை முடியவில்லையோ
காளையனே மறந்தாயோ
காரிகைத் தனித்திருப்பதை

பறவைகள் கூடுவந்து
பாயிசையை பாடிட
விலங்குகள் குகைநாடி
விழியும் மூடியதே

பூவாகப் பூத்து
பாதைதனை நோக்குகிறேன்
பூப்போல உதிர்கிறேன்
பூபாலனைக் காணாது

ஊண் மறந்தேன்
உறவை மறக்கவில்லையே
மண் கலக்குமுன்னே
மனைவியைப் பார்த்துவிடு

யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (2-Nov-23, 3:48 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 104

மேலே