என் உள்ளத்தின் வலிகள் பிடித்துவிட்டதோ உனக்கு 555

*** என் உள்ளத்தின் வலிகள் பிடித்துவிட்டதோ உனக்கு 555 ***



ப்ரியமானவளே...


மழைமேகம் கூடியதால்
கருமையாக தோன்றலாம்...

சில மணித்துளிகளில்
நீலவான
வெண்மேகம் தோன்றும்...

கோபம் கொண்டு என்னுடன்
நீ மௌனித்தாலும்...

எதிர்பார்ப்பு
இல்லாத அன்பை...

யார் என்மீது உன்னைவிட
செலுத்த முடியும்...

நீ நெருப்பாய் என்மீது
வார்த்தைகளை கொட்டிய போதும்...

மரணிக்கும் எண்ணம்கூட
தோன்றவில்
லை எனக்கு...

உன் நினைவு என்னும்
உயிர்காற்றில்தான்...

நான் இன்னும்
வாழ்ந்துகொண்டு இருக்கி
றேன்...

ஈரம் சுமந்த என் விழிகளை
கண்டாலே கலங்கி நிற்பவள்...

என் உள்ளத்தின் வலிகள்
உனக்
கு பிடித்துவிட்டதோ இன்று.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (31-Oct-23, 2:09 pm)
பார்வை : 789

மேலே