உன் நெற்றியில் இதமாய் ஒரு முத்தம் 555
***உன் நெற்றியில் இதமாய் ஒரு முத்தம் 555 ***
ப்ரியமானவளே...
தினம் தினம் நாம் கைகோர்த்து
புல்வெளியில் நடக்கும் போதெல்லாம்...
தொலைதூர பயணம்
எப்போது என்கிறாய்...
இயற்கையின் எழிலோடு
உன்னையும் ரசித்துக்கொண்டு...
மலைப்பாதையில்
ஒரு பயணம் வேண்டும்...
நம் கரம்கோர்த்து...
உன் குறுக்கில் கைபோட்டு
அணைத்துக்கொண்டு...
இதமாய் உன்
நெற்றியில் முத்தம் பதித்து...
உன்னை நான்
அழைத்து செல்ல வேண்டுமடி...
நாம் செல்லும்
மலைப்பாதைக்கு முடிவிருக்கலாம்...
முடிவில்லா என்
வாழ்க்கை பயணத்தில்...
முகவரியாய் நீ
என்னோடு வரவேண்டும்...
நிலையில்லா நீலவானம்
இருளாக தெரியும்...
நீ என் வாழ்வில்
இல்லையென்றால்...
என் வாழ்வும்
இருண்டுதான் போகும் கண்ணே...
அகம் மலர்ந்து
இதயம் கொடுத்தவளே...
என் இல்லத்தை மகிழ்விக்க
நீ மனைவியாக வேண்டுமடி.....
***முதல்பூ.பெ.மணி.....***