பெரியோ னென்றிடப் பேதைமை நீங்கும் - எண்சீர் ஆசிரிய விருத்தம்

எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் விளம் மா அரையடிக்கு)

அரசன் கூறிடு மாக்கமுஞ் செயலும்
..ஆர்வம் மேவிட வாங்கொளிர் மேவும்!
அரங்கம் நிறைந்திட வரவமு மோங்கும்
..அரவம் பெருக்கிட வார்வமும் பெருகும்!
கருதுஞ் செயலதும் களிப்பினிற் சிறந்து
..கற்ப கமெனவே கவனமு மாகும்!
பெரியோ னென்றிடப் பேதைமை நீங்கும்
..பெருமை யோங்கிடப் பேரழ காமே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Nov-23, 4:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

மேலே