தீபாவளி திருநாள்
தீபாவளி திருநாள்
அதிகாலை சூரியன் தன் கதிர்களை விரிக்கும் முன்னே
வான்வெளியில் பளிச்சிடும் பற்பல வெடிகள் மின்னிட
வீடுகளில் விழித்தெழுந்த மக்கள் குளித்து புத்தாடை உடுக்க
சிறியோர்கள் பெரியோரை வணங்கி ஆசிபெற்று மகிழ்த்திட
வீடெங்கும் விளக்குகள் நட்சத்திரங்களை போட்டிக்கு அழைக்க
வானவில்லுடன் போட்டியிடும் விதம் பட்டாடைகள் சலசலக்க
வாசலில் தோரணமும் வானுயர பறந்து சிதறும் பட்டாசுகளும்
வாயில் உமிழ் நீர் வரவரைக்கும் பண்டங்களும் வைத்திருக்க
வந்திருக்கும் சுற்றமெல்லாம் மகிழ்வோடு உண்டு களிக்க
வந்ததம்மா இவ்வருடமும் தீபாவளி கூடிக் கொண்டாடிடவே