மாயா - தாயா

என்னடி அருளரசி பெண் குழந்தை பிறந்தா 'மாயா'னு பேரு வைக்க றதாச் சொன்னியே
இப்ப உனக்கு பெண் குழந்தை பிறந்திருக்குது. அந்தப் பேரையே வைக்கப் போறயா?
@@@@@
ஐயோ வேண்டான்டி அன்பரசி. நம்ம பக்கத்து தெருவில் 'மாயா'னு ஒரு கல்லூரி மாணவி இருந்தா இல்லையா?
@@@@@@
ஆமாம். அவளுக்கு என்ன?
@@@@@@
அவள் மாயமாகிப் போய் ஆறு மாசம் ஆகுது. எங்க போனாள்னே தெரியலையாம். எல்லா செய்தித்தாள்கள்லயும் புகைப்படத்துடன் விளம்பரம் கொடுத்தாங்களாம். இதுவரைக்கும் அவளைப் பத்தி எந்த தகவலும் கிடைக்கவில்லையாம்.
@@@@@@@
பாவம்டி. அவளோட பெற்றோர்கள் எப்படி இதைத் தாங்கிக்கப் போறாங்களோ?
@@@@@@@
இந்தத் தகவலைக் கேட்டதுக்கப்பறம் நான் என் குழந்தைக்கு கண்டிப்பா 'மாயா'னு பேரு வைக்க மாட்டேன்.
@@@@@@
வேற என்ன பேரை உன் குழந்தைக்கு வைக்க முடிவு பண்ணிக்கிற?
@@@@@@@
'தாயா'ங்கிற பேரை அவளுக்கு வைக்க நான் முடிவு பண்ணிட்டேன். 'தாயா'வும் இந்திப் பேரு மாதிரி தானே இருக்குது.
@@@@@@@@@
உன்னோட விருப்பம்டி.

எழுதியவர் : மலர் (10-Nov-23, 7:54 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 36

மேலே