பையன்கள் தொல்லை தாங்க முடியல

ஏம்பா இந்திப் பேரைத் தான் வைக்கணும். இது தான் தற்கால தமிழர் நாகரிகம்னு அடிக்கடி சொல்லிட்டு கண்ட பேருங்களைப் பிள்ளைகளுக்கு வச்சிடரீங்க. அதனால அசிங்கப்படறது பிள்ளைகள் தாம்பா.
@@@@@@
என்னம்மா சொல்லற?
@@@@@@@@
நீங்களும் அம்மாவும் எனக்கு வச்சிருக்கிற பேரால பள்ளியிலும் அசிங்கப்பட்டேன். இப்ப கல்லூரியிலும் அசிங்கப்படறேன்.
@@@@@@@
என்னம்மா ஆச்சு?
@@@@@@@
அழகான அர்த்தமுள்ள பேருன்னு எனக்கு 'நிர்வாணா'னு பேரு வச்சீங்க. நான் எங்க போனாலும் என்னைப் பையன்களும் பொண்ணுங்களும் "நிர்வாணம் போகுதுன்னு" சொல்லிட்டு கிண்டல் பண்ண்றாங்க. எங்க போனாலும் பையன்கள் என்னைச் சுத்திச் சுத்தி வர்றாங்க. என் பேரை மாத்துங்க. இல்லைன்னா நான் கல்லூரிக்குப் போகமாட்டேன்.
@@@@@@@@@
சரி ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்க. உனக்கு வேற நல்ல பேரா வச்சு அரசிதழில் பதிவிட வேண்டியதச் செய்யறேன்.
@@@@@@@
(கண்ணைத் துடைத்துக் கொண்டு) சரிப்பா. நீங்கள்சொல்லறபடியே செய்யறேன். @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Nirvana = Ultimate bliss, Deep Silence, Extinction of the soul

எழுதியவர் : மலர் (9-Nov-23, 5:59 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 31

மேலே