ஆண்யா இல்லை பெண்யா

என்னடா அந்த வீட்டில் 'ஆண்யா, ஆண்யா'னு கூப்பிடறாங்க. ஒன்னுமே புரியல.
@@@@@@
அட, அவுங்க சொந்தக்காரங்க யாருக்காவது குழந்தை பிறந்திருக்கும். தகவல் வந்திருக்கும். ஆண் குழந்தையா, பெண் குழந்தையானு சொல்லிருக்க மாட்டாங்க. அவுங்களுக்கு விவாதமா இருக்கும். ஒருத்தரு ஆண்யா சொல்ல இன்னொருத்தரு பெண்யா சொல்லுவாரு.
@@@@@@@
இருடா. கொஞ்ச நேரம் இங்கேயே நின்னு கவனிப்போம். என்னனு தெரியும்.
@@@@@@@@@
(அந்த வீட்டில் இருந்து ஒரு குரல்): ஆண்யா, ஆண்யா? இங்க வாம்மா.
@@@@@@@
இங்க வாம்மா. ஆண்யா. செல்லமா பையனை இங்க வாம்மா உன் கூப்படறாங்க.
@@########
(ஐந்து வயது சிறுமியின் குரல்): ஏம்மா சும்மா சும்மா என்னை ஆண்யா, ஆண்யா கூப்படற? நான் வீட்டுப்பாடம் எழுதிட்டு இருக்கிறேன். தொந்தரவு பண்ணாதே.
@@@@@@@@@
டேய் பெண் குழந்தை பேருடா. என்ன அநியாயம்டா பெண் குழந்தைக்கு 'ஆண்யா'னு பேரு வச்சிருக்கிறாங்க. அவுங்க வீட்டு ஆண் குழந்தைக்கு 'பெண்யா'னு பேரு வச்சிருப்பாங்கடா.
@#@@@@
ஒருவேளை ஆண்யா இந்திப் பேரா இருக்கும். இந்திப் பேரை குழந்தைகளுக்கு வைக்கிறது தானே தற்கால தமிழர் நாகரிகம்.
@@####
ஆமாம். ஆமாம்.
@@@@@@@@@@@@@@@@@@#@##@####.
Aanya = Gracious. Feminine name. Indian origin.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்