தன்னம்பிக்கை கொள்
தன்னம்பிக்கை கொள்
×××××××××××××××××××××
#தன்னம்பிக்கை கொள்
தரணியை வெல்
#வெல்கப் பெண்மையும்
வெவ்வேறு துறைகளிலே
#துறைகளிலே ஆண்மைக்கு
துச்சம் பெண்ணில்லையே
#பெண்ணில்லையெனில் வல்லரசுயெனும்
பொன்னான வாய்ப்பில்லையே
#வாய்ப்பில்லை மாதர்கள்
வாய்ப்புகளை தவரவிட
#தவரவிடாதே கிடைத்திட்டத்
திறமைகளை வெளிக்காட்டிட
#வெளிக்காட்டு அறிவை
வெளியுலகம் அறியட்டுமே
#அறியட்டும் ஆராய்ச்சிகளை
அதிர்ச்சியாகட்டும் அயலகம்
#அயலகம் போற்றிடும்
அறிவியலை படைத்திடு
#படைத்தவை சிறந்திட
தன்னம்பிக்கை கொள்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்