பார்வதிக்கு என்னம்மா

"பாரதி கண்ணம்மா!
பார்வதிக்கு என்னம்மா!
பரம்பொருளைப் பாரம்மா!
பகல்வேளையில் நீ அவருக்குத் துணையம்மா!

திரிபுரத்தை எரித்தாரம்மா!
தீயிலே குளித்தாரம்மா!
தீக்குளித்துக் குளிர் காய்ந்தாரம்மா!
தீயதை எரிப்பாரம்மா!

முக்கூடலில் வாழ்பவரம்மா!
முக்கண்களை உடையவரம்மா!
முடிவுரையில் மோட்சத்தைக் கொடுப்பவரம்மா!
மூவுலகையும் கைக் கொண்டவரம்மா!
முகராசியில் கைத் தேர்ந்தவரம்மா!

ஆற்றுபபடுத்தும் குணத்தைக் கொண்டவரம்மா!
ஆறுமுகத்திடம் உபதேசத்தைக் கேட்டவரம்மா!
ஆதி அந்தமாய் இருப்பவரம்மா!
ஆதிரை நாளில் தாண்டவம் ஆடுபவரம்மா!

பாரதிக்குக் கண்ணம்மா
பார்வதிக்கு என்னம்மா
பரமசிவனைப் பாரம்மா
பஞ்சு மெத்தையில் உறைபவர் இல்லைம்மா!"

எழுதியவர் : சு.சிவசங்கரி (9-Nov-23, 5:37 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 68

மேலே