பூக்களின் அதிகாரம் புன்னகை அதரத்தில் காண்கிறேன்
பூக்களின் அதிகாரத்தை புன்னகை அதரத்தில் காண்கிறேன்
நோக்கும் இருவிழிகளில் காதல் அத்தியாயத்தை பார்க்கிறேன்
தேக்குகிறாய் செந்தேனை செவ்விதழ் இரண்டில் சிந்தாமல்
யார்க்கு நல்குவாயோ அவர்க்கு ஆயுசு நூறு
பூக்களின் அதிகாரம் புன்னகை அதரத்தில் காண்கிறேன்
நோக்கும் விழிகளில் காதல் அத்தியாயம் பார்க்கிறேன்
தேக்குகிறாய் செந்தேனை செவ்விதழ் இரண்டில் சிந்தாமல்
யார்க்கு நல்குவாயோ அவர்க்கு ஆயுசு நூறு
பூக்களின் அதிகாரம் புன்னகை அதரத்தில் காண்கிறேன்
நோக்கிடும் விழிதன்னில் காதலின் அத்தியாயம் பார்க்கிறேன்
தேக்குகி றாய்தேனை செவ்விதழ் இரண்டில்சிந் தாமலே
யார்க்குநீ நல்குவாயோ அவரது ஆயுசிங்கு நூறடி
===========================================================
யாப்பார்வலர் குறிப்பு :---
முறையே இயல்பு வரிகளில்
பலவாய்ப்பாட்டில் ,விளம் காய் விளம் காய் விளம்
எனும் ஒரே வாய்ப்பாட்டில் அமைந்த கலித்துறை
பாவினக் கவிதை
பூக் நோக் தேக் எதுகை யார்க் --ஆசிடை எதுகை