புலரும் போதில் கதிரவனின் கைதிநான்

நிலவு தழுவும் மலரிதழில் பனித்துளி
நலமா என்றது பனித்துளியை நிலவு
நிலவேநீ உலவும் வரைநான் நலமே
புலரும் போதில் கதிரவன் கைதிநான்

---பல வாய்ப்பாட்டில் அமைந்த கலிவிருத்தம்


நிலவு தழுவும் மலரிதழில் பனித்துளி
நலமா நிலவு பனித்துளியை வினவிட
நிலவு உலவும் வரையில்நான் நலமடி
புலரும் போதில் கதிரவனின் கைதிநான்

மா மா காய் விளம் எனும் ஒரே வாய்ப்பாட்டில் அமைந்த கலிவிருத்தம்

நிலவு தழுவும் மலரிதழில் பனித்துளி
நலமா நிலவு நன்பனியை வினவிட
நிலவு உலவும் மட்டும்நான் நலமடி
புலரும் போதில் கதிரவனின் கைதிநான்

---ஒரே வாய்ப்பாடும் மூன்றாம் சீர் மோனையும் பொலியும்
கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Nov-23, 5:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே