அனார்கலியின் காதல் கண்ணீர் ஆனது

அனார்கலியின் காதல் கண்ணீர் ஆனது
கனாவாய் விரிந்து கானல்நீ ரானது
வினாவாய் விடைதெரியா வேதனை ஆனது
அனார்வெண் புன்னகை கண்ணீர்முத் தானது

அனார்கலியின் காதல் அருங்கண்ணீர் ஆனது
கனாவாய் விரிந்து கானல்நீ ரானது
வினாவாய் விடைதெரியா வேதனை ஆனது
அனார்வெண் புன்னகை அவள்கண்ணீர் முத்தானது

---பல வாய்ப்பாட்டுக் கலிவிருத்தம்
அனார் என்றால் மாதுளை

எழுதியவர் : கவின் சாரலன் (17-Nov-23, 4:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே