நினைப்பவர் போன்று நினையார்கொல்

நினைப்பவர் போன்று நினையார்கொல்
××××××××××××××××××××××××××××××××××××
செவ்வானம் சிவந்திருக்க
செவ்வந்தியாகப் பூத்திருக்கப்
பவ்யமாய் மனதை
பார்வையால் துளைத்தவனே

தென்றல் கலந்தத்
தேனிசையாக உள்ளமதில்
இன்பக் காதலனாக
இரண்டறக் கலந்தவனே

உறவானேன் உயிரானேன்
உதிரத்தின் ஓட்டமானேன்
அறம் மிகுந்த
அற்புத அனகனே

இரவோடு நட்சத்திரமாக
இணைப் பிரியாது
சிரம் நோக்கா
சிறுநொடி இருந்ததில்லையே

வசிக்கும் இடம்விட்டு
வாழ்வாதாரம்  தேடியே
பசிக்கு இரைதேடும்
பறவையாக சென்றவரே

உறவில் கண்டசுகம்
உலுக்கிடும் நினைவால்
உறக்கம் காணாது
உடலும சுருங்குதே

கண்டிடா கண்களும்
கணநேரம் துடித்தே
கண்ணும் நிறுத்திய
காரணம் எண்ணவோ

நாசிவந்த தும்மல்
நச்சென்று வராதது
காசிசாமியராக மாறியிருப்பாரோ
கணவனும்.. தோழியே..

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (17-Nov-23, 4:17 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 45

மேலே