மாதுளை முத்தை சிந்தும் மௌனப் புன்னகை

மாதுளைமுத் தைசிந்தும் மௌனப் புன்னகை
காதலை கண்ணின் கயலால் எழுதினாய்
நீதி செய்யவில்லை நின்காத லுக்கிங்கு
காதல் கண்ணீர் கவிதை ஆனது

---எதுகை மோனையுடன் பல வாய்ப்பாட்டால்
அமைந்த கலிவிருத்தம்

மாதுளைமுத் தைசிந்தும் மௌனமென் புன்னகை
காதலை கண்ணின் கயலால் எழுதினாய்
நீதியைச் செய்யவில்லை நின்காத லுக்கிங்கு
காதல்கண் ணீரான தே

மாதுளைமுத் தைசிந்தும் மௌனமென் புன்னகை
காதலை கண்ணினில் தந்தாய்நீ --பேதையே
நீதியைச் செய்யவில்லை நின்காத லுக்கிங்கு
காதல்கண் ணீரான தே

----கவிதை இன்னிசை நேரிசை வெண்பா வடிவில்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Nov-23, 7:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே