தேனில் விழுந்த திராட்ச்சையோ கருவிழிகள்
தேனில் விழுந்த திராட்ச்சையோ கருவிழிகள்
மேனி ரோஜா மெல்லிதழ் வண்ணமோ
வானில் உலவும் வெண்நிலா உன்னுறவோ
மானின் துள்ளல் நடையை பயில்கிறாயோ
---பல வாய்ப்பாட்டில் அமைந்த கலிவிருத்தம்
தேனில் விழுந்த திராட்ச்சையோ கருவிழிகள்
மேனி ரோஜா மெல்லிதழ் வண்ணமோசொல்
வானில் உலவும் வெண்நிலா உனக்குறவோ
மானின் துள்ளல் நடையினைப் பயில்கிறாயோ
---மா மா விளம் காய் எனும் ஒரே வாய்ப்பாட்டிற்கு
மாற்றி அமைத்த கலிவிருத்தம்
மூன்றாம் சீரில் மோனையும் அமைந்துள்ளது
தேனில் விழுந்த திராட்ச்சை கருவிழிகள்
மேனியோ ரோஜாப்பூ மெல்லி தழின்வண்ணம்
வானில் உலவிடும் வெண்ணிலா உன்னுறவு
மானின்மென் துள்ளல் நடை
தேனில் விழுந்த திராட்ச்சை கருவிழிகள்
மேனியோ ரோஜாப்பூ மென்வண்ணம் --மேனகையே
வானில் உலவிடும் வெண்ணிலா உன்னுறவு
மானின்மென் துள்ளல் நடை
----இன்னிசை நேரிசை வெண்பா வடிவிலும்