காதலில் வெற்றி நடை
குரங்கும் அழகாய் தெரியும்
கழுதையும் அழகாய் பாடும்
ஆந்தையும் அழகாய் பார்க்கும்
காகிதப்பூ அழகாய் சிரிக்கும்
ஆமையும் அழகாய் நகரும்
பூனையும் அழகாய் கொஞ்சும்
செலவும் அழகாய் நடக்கும்
முதுமையிலும் அழகாய் வாழ
வலியிலும் அழகாய் பழகும்
இரு உள்ளத்திலிருந்து காதல்
மடை திறந்து பாய்ந்தால்....
காதலர்கள் மனம் சேர்க்கும் காதல்
கடவுளின் படைப்பினில் காதல்
காதலில் அனைத்தும் அழகே
காதலின் வெற்றி நடை