அழுகுரல் கேட்கலையா ஆண்டவனே
அழுகுரல் கேட்கலையா ஆண்டவனே...
××××××××××××××××××××××
பத்து திங்கள் சுமந்து பெற்ற/
பிள்ளைகளை பாதுகாப்பில் அலட்சியம் தேவையில்லை/
பாலுட்டி சேலையில் தூளிகெட்டி தாலட்டு /
பாடி வளர்த்த பிள்ளைகளை மறந்து /
வேடிக்கை காணுவதில் மெய் மறந்து/
வேங்கையாக பிறந்தவளை இழந்திட்ட பரிதாபம்/
தண்ணீர் இல்லாத ஆழ்துளை கிணற்றில் /
தள்ளாடி விழுந்த குழந்தையை உயிருடன்/
மீட்க முடியாததது மனிதனின் இயலாமை/
மதி இழந்த அலட்சியமே காரணம்/
ஆண்டவனையும் அரசாங்கத்தையும் குறைகள் சொல்லாமல்/
தனி மனிதர்களுக்குள் மனிதநேயம் வேண்டும் /
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்