புதுக்கவிதை

நேரிசை வெண்பாக்கள்


யாப்புக் கடினமென்று யாப்புநீக்கி சந்தப்பா
வாய்ப்பாடல் நன்றாம் வசனமில்லை -- வைப்பில்
வசனத்தைப் போற்றும் வழக்கம் தொடர
பசப்புமாகா யாப்பின்பா பார்

யாப்பு கடின மெனின் சந்தப்பா எழுதலாமே. ஆனால் உலகமோ
வசனத்தை கவிதை என்று சொல்லி நாமும் அதைப் பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள்

.

புதுப்பா கவிஞர் பொதுவி லுணர்ச்சி
யெதுவுமின்றி பொங்கும் யெதையும் -- புதுப்பா
யிதுவென சொல்லி யெதுகைமோனை விட்டு
கதைக்கும் செயலதைக் காண்



விளக்கம்

யாப்பைக் கையாளுதல் கடினமென சந்தம் பாடினர் நன்றது .. இன்றோ
உரை நடை எழுதி அதைப் பிறர் கவிதை யென்று போற்ற வேண்டும் என்று
எதிர்பார்க்கின்றனர். அப்படி போற்றிட உண்மை கவிதையின் இலக்கணம்
தமிழிலிருந்து மறைந்தே போகும் என்பதை கவனத்தில் கொள்வீர்

......

எழுதியவர் : பழனி ராஜன் (18-Nov-23, 1:19 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : puthukkavithai
பார்வை : 388

மேலே