விவேக சிந்தாமணி - நூல் - பாடல் 4 - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
ஒப்புடன் முகம்,ம லர்ந்தே
..உபசரித்(து) உண்மை பேசி
உப்பிலாக் கூழ்இட் டாலும்
..உண்பதே அமிர்தம் ஆகும்
முப்பழ மொடு,பால் அன்னம்
..முகம்கடுத்(து) இடுவா ராயின்
கப்பிய பசியி னோடு
..கடும்பிணி ஆகும் தானே! 4
- விவேக சிந்தாமணி