பகல் கனவு

பகல் கனவு.... .[சிங்கப்பூர் பொழில் பண்பலையில் ஒலிபரப்பான கவிதை]
16 / 11 2023
பூப்போல சிரித்திடும் மழலைமனம் வேண்டும்.
பொல்லாப்பு சொல்லிடாத சொந்தபந்தங்கள் வேண்டும்.
கலப்படம் இல்லாத உணவுவகை வேண்டும்.
மாதம் மும்மாரி மழைபொழிய வேண்டும்.
உழவனின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்.
மக்களுக்காக ஆளும் நல்அரசு வேண்டும்.
கையூட்டு வாங்காத ஊழியர்தம் வேண்டும்.
சாதிமத பேதமில்லா சமுதாயம் வேண்டும்.
ஏற்றத் தாழ்வில்லா நீதிமுறை வேண்டும்.
காதலை ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்கள் வேண்டும்.
ஆணவ கொலைகளற்ற அரவணைப்பு வேண்டும்.
ஏழைகளும் படித்திட தடையில்லா கல்விமுறை வேண்டும்
போதைக்கு அடிமையாகாத மாணவச்செல்வங்கள் வேண்டும்.
பேதைகளின் கற்புக்கு முழு பாதுகாப்பு வேண்டும்.
போர்வெறி குறைந்து உலக சமாதானம் வேண்டும்.
மதவெறி மறைந்து வளரும் மனிதநேயம் வேண்டும்.
மொழிவெறி குலைந்து மொழிசுதந்திரம் வேண்டும்.
மாசு இல்லா பூமி தழைக்க பொறுப்பான எண்ணம் வேண்டும்.
மாமியார் மருமகள் சண்டையில்லாமல் மாண்புற வேண்டும்.
முதியோர் இல்லம் இல்லாமல் உலகம் மாறவேண்டும்.
இத்தனையும் பகற்கனவாய் மறைந்திடாமல் – சொன்ன
அத்தனையும் நனவாய் இங்கு பலித்திடல் வேண்டும்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (20-Nov-23, 4:30 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : pagal kanavu
பார்வை : 60

மேலே