இதுபோதும் எனக்கு
எச்சரிக்கை ஆண்கள் சாக்கிரதை
(இன்றைய கணவர்களுக்கு சமர்ப்பணம்)
சிரிப்பதற்காக மட்டும்
இதுபோதும் எனக்கு,
அதிகாலை விடியல் தாண்டி
எழுப்பும் உன் சுப்ரபாதம்;
அமைதி குழைந்த உன் வசைபாடல்;
அது சரியில்லை இது சரியில்லை என்று ஆவேசத்துடன் சுதிசேர்த்த
இம்சை வார்த்தியங்கள்;
பொறுப்பே இல்லை பொறுப்பே இல்லை என்று வெறுப்புடன் பொரிந்து தள்ளும் லொட லொட வாய்;
பொறுமையை சோதிக்கும் போராட்டம்;
இசை பாடும் உன் கையிலிந்து உருண்ட பாத்திரம்;
உன் கண்ணில் இருந்து வழியும் கோபம்,
நீலிக் கண்ணிர்,
நிரைந்து கிடக்கும் உன் பேராசை;
எரிக்கத்துடிக்கும் உன் கனல் கக்கும் கண்கள்;
எட்டாத தூரத்தில் இருந்து எட்டிப்பார்த்த கதிரவன் கூட இடம் தவறி புவிக்குள் புகுந்து விட்டோமோ என்று பயந்தோடும் பாங்கு;
இதுபோதும் எனக்கு.
சட சட வென்று காரியம் சாதிக்க வரும் கண்ணீர் குளியல்;
வெள்ளமே பெருக்கெடுத்து வந்தது போல் ஓடும் வற்றாத கண்ணீர்;
கனக்கமுடியாத ஏக்கம்,
காணமுடியாத துக்கம்,
நித்தம் நான் மட்டும் நீந்தும் சோகக் கடல்,
வெளியே சிரிப்பு
வேடிக்கை பார்க்கும் கண்கள்;
வேருக்கு வெந்நீர் ஊற்றியது போன்று வரும் வேக வைக்கும் வார்த்தைகள்;
இதுபோதும் எனக்கு.
அடிமுட்டாளாக்கும் உன் யோசனை,
அமைதியைக் குலைக்கும் உன் சீற்றம்,
அடக்குமுறையை அகிம்சை வழியில் போராடுதல்
தாமதிக்கும் உணவு, தரங் கெட்ட சமையல்
வீம்புக்கு செய்யும் இந்த உபத்திரம்,
விளையாட்டாய் விசமத்தோடு சீண்டும் உன் சீண்டல்,
கேட்டும் கேட்காதது போன்று அடைத்துப்போன உன் செவிட்டுக்காது.
கேட்க வேண்டாததை கேட்கத் துடிக்கும் உன் ஊசிக் காது;
முடியத்துடிக்கும் உன் முன்தானை,
முழு வார்த்தை பேசாது முணு முணுக்கும் உன் உதடு,
இதுபோதும் எனக்கு.
திகில் மூட்டும் சம்பவம்
திக்கற்ற நிலை
திடிக்கிடும் வாழ்க்கை பயணம்
கோபத்தின் உச்சம்;
காட்ட முடியாத அச்சம்;
மட மட என்று உருளும்
சட்டியின் வாத்தியங்கள்,
பூகம்பமே புறப்பட்டு வந்து விட்டது போல் சமையல் அறையில் எழும் சப்தம்;
கட கட என்று அதிரும் வீடு
காலடி ஓசையில் இருந்து எடுக்கும் நடுக்கம்;
காய்ந்து போன எனது கம்பீரக்குரல்;
கொட்டிக்கிடக்கும் வீட்டு வேலை
கொதிக்கும் உன்
குமுரலுக்கு மத்தியில் எனக்கு குடிக்க கொடுத்த ஆறிப்போன காபி;;
இன்னும் குடிச்சி தொலையலையா என்று கூறுவது போல்
கொள்ளிக்கட்டையாய் முழிக்கும் உன் கண்கள்
இதுபோதும் எனக்கு.
ஒருவேலையைக் கூட ஒழுங்கா செய்ய துப்பில்லை
வாய்மட்டும் நீழுது என்ற வசைபாட்டு;
பக்கவாத்தியம்
தொல்லை கொடுக்கும் தொலைக்காட்சி;
வந்தே மத்தளம் தட்டும் பாத்திரம்
இசைபாடும் கரண்டி
இதுபோதும் எனக்கு.
பொரணிபேசும் வாய்
போதாததற்று உற்றார் ஊரார் அடுத்த வீட்டு சமாச்சாரம்;
அத்தை மாமன்
நாத்தானர் என்று
வம்சதையே வாயில் போட்டு மென்னு துப்பி தும்சம் செய்யும் வாய்ப்பேச்சி.
படபடக்கும் பாசாங்கு வார்த்தைகள்
சட சட என்று வடியும்
நீலிக்கண்ணீர்;
கொதிக்கும் மனது;
கொந்தளிக்கும் கோபம்;
கொப்பளிக்கும் வசைசொற்கள்
இதுபோதும் எனக்கு.
துணைக்கு துலக்கும் சமையல் பாத்திரம்
விடுதலைபெறதா விளக்குமாறு துடைப்பம்,
இது போதும் எனக்கு.
திடீர் திடீர் என்று அசத்த வைக்கும்
அதிசய ஆனால் ஆபாத்தான சமையால்,
காரீயம் சாதிக்க வரும்
கோடை கால மழை போல் நமட்டு சிரிப்பு.
தன் வீட்டு உறவினர்
வந்தால் தடபுடல்,
ஆச்சரியப்படுத் வைக்கும் உபசரிப்பு,
மொத்தகூட்டம் வந்து மொய்த்தாலும்
சப்தமில்லாமல் தயாராகும் வித வித விருந்து
விறுவிறுப்பு சுறுசுறுப்பு;
தடுமாறி மறந்து என்வீட்டார் வந்தால் அசிங்கப்படும்
அனல் கக்கும் அடுக்கு அடுக்கு வார்த்தைகள்;
வருமுன் உவாதை,
வந்தபின் உபத்தரியம்,
நையாண்டிப்பேச்சி;
உதடு ஒட்டாத பேச்சி ,
உள்ளங்கை நகைக்க முடியத வார்த்தை,
மிரண்டோடும் என் வீட்டினர்
இதுபோதும் எனக்கு.
மாதம் ஒருமுறை சம்பளம் வந்தவுடன்
மாதம் பிறந்த முதல் வாரத்திலேயே மாயமாய் மறையும் சம்பளம்
இதுபோதும் எனக்கு;
வெளியில் கூட்டம்
வேடிக்கைபார்க்கும் ஜனங்கள்
நொந்துபோன மனசு
இதுபோதும் எனக்கு
முழு நீள முடிவதையாத பட்டியல்
முனைப்புடன் வாங்கிய ஆன்லைன் பொருட்கள்,
வீதியிலே சண்டை,
வீட்டுப்பொருட்களை சுமக்க கணவன்,
சொற்போர்கள்;
இதுபோதும் எனக்கு.
இரத்த கிளரியாகும் போராட்டம்;
இடையே பறக்கும் பொருட்கள்.
கிழித்து எரியும் படங்கள்
கசங்கிக்கிடக்கும்
மெத்தை தலையணை;
இதுபோதும் எனக்கு.
சமையல் என்றபேரில் நடக்கும் அறுவைச் சிகிச்சை ;
மற்றும் அதிர்ச்சி வைத்தியம்
இதுபோதும் எனக்கு.
நீபாடும் சுப்ரபாதம்
அடுத்து வாங்க இருக்கும் விலையுயர்ந்த பொருளுக்காக பொங்கும் ஆச்சரியமூட்டும் அதிசய பாசம்;
அதி நவின அதிசய சிரிப்பு
ஆச்சரியமூட்டும் சில செயல்கள்
இதுபோதும் எனக்கு.
இராச்ச உலகில் வந்து
குடியிருந்த நினைப்பு;
நரகமே நகர்ந்து வந்து எட்டிபார்ப்துபோல் நினைப்பு
இதுபோதும் எனக்கு
எட்டி எடுக்காத கரங்கள்
கண்டும் காணமல் போகும் உன் கண்கள்
எல்லாம் தெரியும் என்ற உன் கர்வம்;
கர்ஜீக்கும் குரல்கள்;
இடையிடையே எடுக்கும் மாகா காளி அவதாரம்;
பொழுது போக்க வார விசிட்டுக்கு மாலு,
பளு தாங்காது சுமக்க வைக்கும் பொருட்கள்;
மாதசம்பளம் மறுநாளே மறையும் மர்மம்;
நாகரீக வாழ்க்கை
நலம் பேச
கைபேசிக் கூட்டம்.
எடுத்து தின்ன
பல வகை பலகாரங்கள்,
எடை குறைக்க
டயட்,
உடற்பயிற்சி பொருட்கள்;
அநியாயப் பேச்சி
அந்நியப்படுத்தும் உறவு முறைகள்;
அந்த நாள் நடந்த நிகழுவுகளின் நிழல்களாய் தெடரும் சண்டை;
அடுத்தகனமே
வேண்டாதை வாங்கிக் குவிக்க வாரம்
ஒரு முறை சந்தைக்கு எடுக்கும் படை எடுப்பு
வீட்டை நிரப்பும் துணிகள் வீட்டுச் சாமான்கள்
வாடகைக்கார் பவனி
வாயடைத்துப்போன நான்
வாங்கியே தின்ன துடிக்கும் உனது வாய்;
அழகை கெடுக்கும் என்று
குழந்தையை ஈன்றெடுக்க தடைபோடும் இதயம்.
சந்தேகப்பார்வை
சமாளிக்கும் வாய்,
ரெடிமேட் சிரிப்பு
ரெய்டாகும் பேங்க் அக்கவுண்ட்;
மாதர்சங்க மீட்டிங்
மகளீர் கெட்டுகதர்
மறைவாய் வீட்டின்
அறையில் பதுங்கிடக்கும்
அன்பு கணவனாய் எனக்கு
கிடைத்த பல பல பட்டங்கள்
இதுபோதும் எனக்கு
இதுபோதும் எனக்கு
குறிப்பு; யாரையும் துன்புறுத்த எழுதவில்லை
சிரியுங்கள் சிரித்த பின் மறந்துவிடுங்கள்