புரியாத சோகம்

நிலவைப் பிடிக்க
நெடுநாள் யோசித்து
ஒரு நாள் வலை வீசினேன்
அன்று அமாவாசை
என்பதை அறியாமல்!

சாதனையை
அணைக்க நினைத்த நான்
வேதனைத் தீயை
வெறுங்கையால் அணைக்கிறேன்

மண்ணில் கூட
நடக்கத் தெரியாத நான்
விண்ணில் பறக்க
ஆசைப்படுகிறேன்

ஒருவழிப் பாதையில்
பயணம் செய்துகொண்டு
எதிர் வாகனத்தை
எதிர் பார்க்கிறேன்

வீதியில் எதையோ
தொலைத்துவிட்டு
வீட்டில் தேடுகிறேன்.

இன்னமும் தேடுகிறேன்
இழந்தது எது
என்று தெரியாமல்.

வெளிச்சம் வேண்டுமென்று
விளக்கைத் தேடினேன்
விளக்கு என்னவோ
அருகில்தான்!
வெளிச்சம் மட்டும்
ஏன் வெகு தூரத்தில்?





எழுதியவர் : டி.என். முரளிதரன் (16-Oct-11, 8:02 pm)
சேர்த்தது : T.N.MURALIDHARAN
Tanglish : puriyaatha sogam
பார்வை : 701

மேலே