கண்ணோடு நீசொன்ன காதல்மென் பூங்கவிதை
கண்ணோடு நீசொன்ன காதல் கவிதையோ
விண்ணோடு சென்றிடும் வான்நிலா மெல்லிய
வெண்மலரே உன்காதில் வந்துசொன்ன பாடமோ
வண்ணவோவி யம்நெஞ்சி லே
-----இன்னிசை வெண்பா
கண்ணோடு நீசொன்ன காதல் கவிதையோ
விண்ணோடு சென்றிடும் வான்நிலா -- கண்சிமிட்டும்
வெண்மலரே உன்காதில் வந்துசொன்ன பாடமோ
வண்ணவோவி யம்நெஞ்சி லே
---- நேரிசை வெண்பா
கண்ணோடு நீசொன்ன காதல்மென் பூங்கவிதை
விண்ணோடு செல்லுமந்த வான்நிலவு கண்சிமிட்டும்
வெண்மலரே உன்காதில் வந்துசொன்ன பாடமோசொல்
வண்ணவோவி யம்நெஞ்சி லேவரைந்து செல்கிறதே
-----எதுகை மோனை முற்றிலும் காய் கலிவிருத்தம்
கண்ணோடு நவின்றநிந்தன் காதல்மெல் லிளங்கவிதை
விண்ணோடு உலவுமந்த வளர்நிலவு விழிசிமிட்டும்
வெண்மலரே உனதுகாதில் வந்துசொன்ன பாடமோசொல்
வண்ணநல்லோ வியம்நெஞ்சி லேவரைந்து செல்கிறதே
----கலித்தளை அமைந்த தரவு கொச்சகக் கலிப்பா