பெண்களுக்கு எதிரான வன்முறை தினம்
*பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்* பற்றி ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் *கவிதை ரசிகனாகிய நான்* தவறாமல் படிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன்........
😢😢😢😢😢😢😢😢😢😢😢
*பெண்களுக்கு எதிரான*
*வன்முறை ஒழிப்பு தினம்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
😢😢😢😢😢😢😢😢😢😢😢
வன்முறை என்பது
ஒரு வகை.....!
பெண்களின் மீதான
வன்முறை என்பது
பலவகை......!
பிறக்கும் போது
பெண் குழந்தை என்ற
ஏளன பேச்சு
ஒரு வன்முறை......!
முலைப்பாலுக்கு பதிலாக
கள்ளிப்பால் ஊட்டுவது
ஒரு வன்முறை......!
சேலைத்தொட்டிலில்
போடாமல்
குப்பைத்தொட்டியில்
போடுவது
ஒரு வன்முறை.....
பெண் பிள்ளை தானே என்று
"அடிப்படை உரிமைகளே"
மறுக்கப்படும் அலட்சியம்
ஒரு வன்முறை......!
பருவமடையும்
முன்னரே பாலில்
தொல்லைக்கு ஆளாவது
ஒரு வன்முறை.......
பூப்பெய்தவுடன்
அவள் சுதந்திரத்திற்கு
போடப்படும் பூட்டு
ஒரு வன்முறை........
திருமண சந்தையில்
"பேரம் பேசுவது"
ஒரு வன்முறை......
பிடித்தவனோடு
திருமணம் செய்தால்
"ஓடுகாலி"என்பது
ஒரு வன்முறை.......
திருமணம் தள்ளிப்போனால்
"முதர்கன்னி" என்று அழைப்பது
ஒரு வன்முறை.....
அப்படியே திருமணம்
செய்து கொண்டு போனால்
அவளின் நிறைய
ஆசைகள் எல்லாம்
அதிகாரத்தால்
"நிராசையாகுவது"
ஒரு வன்முறை......
"மெய் தொட்டு"
சுகமாக்க வேண்டிய கரம்
"சிகரெட்டால் சுட்டு"
புண்ணாக்குவது
ஒரு வன்முறை........
கணவனின் கொடுமை
தாங்காமல்
பிறந்து வீட்டுக்கு வந்தால்
"வாழாவெட்டி" என்று
வசை பாடுவது
ஒரு வன்முறை.........
கணவன் எதிர் வராமல்
இறந்து விட்டால்
"விதவை" என்று
தள்ளி வைப்பது
ஒரு வன்முறை........
இன்னும்
எழுதிக் கொண்டே போனால்
எத்தனை ஏடு வேண்டுமோ?
அதனால் நிறுத்தி விட்டேன்....
பெண்கள்
நாட்டின் கண்கள் என்றோம்
ஆனால்
இமையாகி பாதுகாக்க
மறந்து விட்டோம் .....
"ஆறு"களுக்கு
பெண் பெயர் வைத்தோம்
ஆனால
அது "மாசடைவதை"
தடுக்க தவறிவிட்டோம்.....
பூமிக்கு "பெண் பெயர்
சூட்டினோம்"
ஆனால்
அதன் "பொறுமையை"
சோதித்து விட்டோம்.....!
பெண்ணை
"தெய்வங்கள்" ஆக்கினோம்
ஆனால்
"கண்ணியத்துடன்"
நடந்து கொள்ள
மறந்து விட்டோம்.......!
பேசும் மொழியை
"தாய் மொழி" என்று
அழைத்தோம்
ஆனால்
அதற்கு "மதிப்பளிக்க"
மறந்து விட்டோம்......
"பெண்பாவம்
பொல்லாத பாவம்" என்றோம்
ஆனால்
அவர்களுக்குப்
பாவம் செய்வதையே
பழக்கமாக்கிக் கொண்டோம்......!!!
"மண்ணின்றி"
போனால் மட்டுமல்ல
"பெண்ணின்றி" போனாலும்
மனித இனம் தளைப்பது
அழிந்து போகும்
மனித இனம்
ஒழிந்து போவதற்குள்
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்....!!
அவர்களுக்கு தேவையான
பாதுகாப்பை அளிப்போம்.....!!
*உலக பெண்களுக்கு* *எதிரான வன்முறை*
*ஒழிப்பு தின*
*வாழ்த்துக்கள்......!!!*
*கவிதை ரசிகன் குமரேசன்*
😢😢😢😢😢😢😢😢😢😢😢