பூக்கள் மிதிக்கபடுகின்றன !
காலை நேரத்து ஓட்டத்தில்
சாலை யோரத்தில்
சிதறி இருக்கிற
பூக்கள் மிதிக்கபடுகின்றன
மனிதர்கள் கால்களால் !
அதே காலை நேரத்தில்
பள்ளிக்குப் பறந்தோடும்
மழலைபூக்களும் மிதிக்கபடுகின்றன
மனிதமே இல்லாத
புத்தகங்களால் !