எனக்கு ஒரு வரம் வேண்டும்

கண்ணிற்கு கவிதை
தந்தான்
கண்ணெடுத்துப்
பார்க்கவேண்டும்
விழி வரம் வேண்டும்
என்றான்
பார்த்தாள்
பின்
மொழி வரம் வேண்டும்
என்றான்
புன்னகை இதழில் மலர
மௌனம் கலைத்தாள்
மாலை வரும்
வரம் வேண்டும்
என்றான்
வந்தாள்
கைவரம் கேட்டான்
அதையும்
தந்தாள்
பற்றிய கையுடன்
அவனுடன் நடந்தாள்
இத்தனை வரம்
தந்தேன்
எனக்கு ஒரு வரம்
வேண்டும் என்றாள்
உன்தோள் வேண்டும்
என்றாள்
தந்தான்
தோளில் சாய்ந்தாள்
அந்த மலையும்
அந்த வானில்
அழகாய் சாய்ந்தது
---கவின் சாரலன்