இறைவனிடம் என் வேண்டுதல்

நாற்பத்தியொரு ஏழை உழைப்பாளிகள்
வேலை நடக்கும் சுரங்கப் பாதை
ஒன்றில் சரிவு ஏற்பட உள்ளேயே
சிக்கி வெளியேற முடியாது இருக்கின்றார்கள்
இதுவரை எத்தனையோ பிரயத்தனம் செய்தும்
இவர்களை வெளிக்கொணர முடிய வில்லை
இறைவா உன்னிடம் நான் வேண்டுதல்
வைக்கின்றேன் இந்த ஏழைகளை வெளிக்கொணர
நீதான் வெளிக்காட்ட வேண்டும் இவர்கள்
வெளியே வந்து அவர்கள் குடும்பத்திற்கு
இந்த காத்திகையில் விளக்கேற்றவேண்டும்
இறைவா இறைவா இதுவே என் வேண்டுதல்
இந்த தீப திருநாளில்

எழுதியவர் : (26-Nov-23, 1:59 pm)
பார்வை : 51

மேலே