அருள்வாய் நீ எனக்கு அன்புடனே
அருள்வாய் நீ எனக்கு அன்புடனே,
ஆனந்தம் பெருகிடவே
இனிமை நிறைந்திடவே
ஈர்த்த சிவனே,
உண்மையாய் இருப்போனே,
ஊமையாய் சிரிப்பொனே,
எங்கும் நிறைந்தவனே,
ஏகாந்தத் திருவருளே,
ஐந்தெழுத்தில் வீற்றிருப்பவனே,
ஒருமையில் பன்மையாய்,
ஓங்காரத் திருவுள்ளமே,
ஔடதமாய் எமக்கு
எஃகு போலுறுதி தருவாயே...