தாய்க்கு ஒரு தாலாட்டு

நினைவுதிர்ந்து நிர்மலமான
புன்னகையுடன் வசந்தம்
எதிர் நோக்கும்
பூவே தாலேலோ.....

கை யணைப்பில்
கண்ணக்குழி உடன்
சிரிக்கும் மங்கா
நிலவே தாலேலோ.....

நிலவு முகமுன்
காணுகையில் கறைந்தே
போகு மென்மனம்
தங்கமே தாலேலோ.....

மழலைப் போல்
மயக்கும் மாயமே
தத்திப் பேசும்
தாயே தாலேலோ......

அறிவு முதிர்ந்த
ஆத்ம நட்பே
அரவணைக்கும் அழகிய
பூங்காற்றே தாலேலோ......

பயமறியா பாரதியின்
புதுமைப் பெண்ணே
பயமகற்றி ஆனந்திப்பாயா
அறிவே தாலேலோ.....

இன்று சென்றுநீ
காத்திருந்தால் நாளை
நானும் கைகோர்ப்பேன்
அன்னையே தாலேலோ.....

வந்தவர் அணைவரும்
ஒருநாள் சென்றுதான்
ஆகனும் இதுதானேநீதி
வைரமே தாலேலோ.....

பயம்வுதறி புன்னகை
முகமாக புத்தம்புதுப்
பூவாய் பயணித்திடு
பால்நிலவே தாலேலோ......


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (28-Nov-23, 6:14 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 111

மேலே