உதிரிப்பூக்கள்

வடிவில் வாசத்தில் வண்ணத்தில்
வேறுபடினும் காணுவோர் கருத்தைக்
கவர்ந்திடும் கண்கவர் மலர்கள்
ஆயிரம் ஆனந்தம் கொள்ளும்
அவனியில், அன்றலர்ந்த அவள்
உதிர்ந்த மலராக உதிரம்
உறைந்து உற்றவன் நினைவில்
உலர்ந்து உருத் தெரியாது
அழியும் நிலை ஏன்.....?

படைத்தவன் இரக்கம் மறைந்ததா....?
பெற்றவன் ஈரம் வறண்டதா.....?
சமுதாயம் சீர்குலைந்ததா.....?
குற்றேவல் புரிய குலமகள்
மீண்டு வந்தா ளென்று
குதூகலத்தில் ஆழ்ந்ததா சுற்றம்....?

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (28-Nov-23, 6:12 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : uthirippookal
பார்வை : 51

மேலே