பவளயிதழ்ப் புன்னகையில் பூவெழிலும் வந்தாய்

குவிந்தபூ மொட்டு குதுகலமாய் பூக்க
சிவந்தசெவ் வானமும் சித்திரம் தீட்ட
தெவிட்டாத தேன்மலர்கள் தென்றலில் ஆட
பவளயிதழ்ப் புன்னகையில் பூவெழிலும் வந்தாய்
கவிபாட நானும்வந் தேன்

-------- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (29-Nov-23, 7:12 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே