சொல்லடியே கிளியே

சொல்லடியே கிளியே
====================

அம்மன் ஊர்வலத்தில்
ஆயிரத்தில் ஒருத்தியாக /
கண்டேனடி காதல்
கொண்டேனடி உன்னை/

மஞ்சள் உடையிலே
மயங்கியதே மனமும் /
மல்லிகைப் பூவாக
மலர்ந்தப் புன்னகையால்/

பேசவே மறந்தனேடி
பரவசம் கொண்டு/
புயலாக வந்தவளே
பார்வையால் வீழ்த்தி/

இதயத்தை நொறுக்கி
இயல்பாகச் செல்பவளே /
இனிய செய்தியாக
இணைந்திடச் சொல்லடி/

சமத்துவ புறா ஞான அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (29-Nov-23, 9:53 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 74

மேலே