மனதின் கதவினை மௌனமாய்

கனவின் கதவை துயில்நீ திறக்க
மனதின் கதவினை மௌனமாய் என்னவள்
மாலைக் கதவை நிலவு திறக்கபூஞ்
சோலையில் புன்னகைவந் தாள்

-----இன்னிசை வெண்பா

கனவின் கதவை துயில்நீ திறக்க
மனக்கதவை என்னவள் மெல்ல -- கனவெழிலாள்
மாலைக் கதவை நிலவு திறக்கபூஞ்
சோலையில் மௌனமாய்வந் தாள்

---- நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (30-Nov-23, 9:56 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே