என் வீடு

என் வீடு (உடம்பு)

இளமை என் வீட்டில்
இருந்த போது
என்னால் முடியாதது
ஏதும் இல்லை என்றது
என் மனம்

இப்போது?
இளமைக்கு என்னை
பிடிக்க வில்லை
என் வீட்டை விட்டு அடிக்கடி
வெளியே சென்று விடும்
ஏதோ என்ன என்று
சுற்றத்தாரும் சூழ்ந்திடுவார்.

வெளியே சென்ற
இளமை சில நாட் கழித்து
வீடு திரும்பி விடும்
சுற்றத்தாரும் அவர் அவர்
வீடு திரும்பி விடுவார்.

என்னால் முடியாதது
ஏதும் இல்லை என்று
என் மனம்
இப்போது சொல்வதில்லை.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (3-Dec-23, 1:07 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : en veedu
பார்வை : 67

மேலே