கண்ணேயென தன்பின்வழி கனிந்தேயுனை யழைத்து - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(கனி 3 / மா)
(1, 3 சீர்களில் மோனை)

கண்ணேயென தன்பின்வழி கனிந்தேயுனை
..யழைத்து
விண்ணேசெலும் விமானந்தனில் விருப்பாகவே
..யிருத்தி
தண்டாமரை மலராளென தகவாயுனை
..நினைந்து
வெண்சாமரை வீசியுன்றனை விளையாடியே
..மகிழ்வேன்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Dec-23, 3:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே