நான் பட்ட கடன்
நான் ஒரு ஸ்மார்ட் செல்போன் வாங்கினேன்
அப்போதிலிருந்து நான் ஸ்மார்ட் இல்லை!
நான் பணம் சம்பாதிக்க புதிய வேலையில் சேர்ந்தேன்
விரைவில் என்னை பாதித்த காதல் வலையில் விழுந்தேன்
ஆசையுடன் மோட்டார் பைக் ஒன்றை வாங்கினேன்
பைக்கில் யார், பின்னால் அமர்வாள் என ஏங்கினேன்
என்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்தேன்
ஒன்று இரண்டு உயிர்கள் உருவாக கணை தொடுத்தேன்
நால்வரானேன் அதனால் நாலுசக்கரங்களை தேடினேன்
கடனில் ஒரு மகிழுந்து வாங்கி குடும்பத்துடன் ஓட்டினேன்
நல்ல வீட்டில் குடியிருப்பினும் நல்லதொரு வீடு தேடினேன்
ஒரு கடன் முடிந்து இன்னொன்று, சொந்த வீடு வாங்கினேன்
எனக்கு இப்போது பேரப்பிள்ளைகள் ஒன்றிரண்டல்ல, நாலு பேர்
என் வீட்டுக்கடனை அடைத்தால்தான், இவர்களுக்கு நல்ல பேர்