காஷ்மீர் தொட்டு கேரளா வரை
காஷ்மீர், இயற்கை அன்னை படைத்த அழகிய சொர்கம்
இங்கே சென்று தங்கினால் நேராக போயிடலாம் சொர்கம்
கோதுமை மற்றும் சர்தாருக்கு பெயர் போன இடம் பஞ்சாப்
பஞ்சாபுக்கு பெயர் வந்தது, சர்தார் மற்றும் கோதுமையால்
ஹிமாச்சல் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது சிம்லா
இங்கு 'புதியவானம்' பாடிய எம்ஜிஆர் போட்டிருந்தார் குல்லா
ராஜஸ்தான் என்றாலே ராஜபுத்திரர்கள் மற்றும் கோட்டைகள்
சைவம் உண்பவர் அதிகம், அதனால் இதற்கு ராஜா ஸ்தானம்
குஜராத் உருவாக்கியது காந்திஜி, சர்தார்வல்லபாய் படேல்
குஜராத் சிங்கம் ஆளும் வரை, நாம் எவருக்கும் பயப்படேல்
மாராட்டியார் இனப்பற்று உணர்ச்சி மிக அதிகம் உள்ளவர்கள்
அம்பேத், கவாஸ், டெண்டுல்..(கர்) நம் புகழை உயர்த்தியவர்கள்
ஆங்கிலேயர் ஆட்சியில் சில காலம் இந்தியதலைநகர் கல்கத்தா
இன்று மேற்கு வங்காளத்தின் அசைக்கமுடியாத தலைவி மம்தா!
தேயிலை, மழை இரண்டுக்கும் புகழ் வாய்ந்த மாநிலம் அசாம்
இப்போது தமிழ்நாட்டில் கூட இந்த மக்கள் அதிகம் வந்தாச்சாம்
பூரி ஜகந்நாத்தும் கொனாரக்கும் அழகுபடுத்துவது ஒரிஸ்ஸா
இந்த அன்பு மக்களுக்கு, பூரி பொரித்து தருவோம் நம் பரிசா
தர்மஸ்தலா, உடுப்பி, மூகாம்பிகை சிறப்பிக்கும் கர்னாடகா
பெங்களூரு, காவேரி விஷயத்தில் நம்முடன் பல நாட்கள் கா
காரமான ஆவக்காய், பங்கனபல்லிக்கு பேர் போன ஆந்திரா
அதிசுவை நெய்குஞ்சாலட்டு சுவைக்கணுமா, திருப்பதிக்கு ரா
அற்புதெலங்கானா, தலைநகர் ஹைதராபாத், சிறப்பு பிரியாணி
நல்ல முத்துமாலை, வளையல்கள் வாங்கணும்னா, இங்கே போ நீ
வயநாடு, மூனார், குருவாயூர், பத்மநாபசாமி கோவில் உள்ள இடம்
கொழப்புட்டு, நேந்திரம், பலா இவை 365 நாளும் கிடைக்கும் இடம்
இன்னும் விவரிக்கப்படாத நம் நாட்டு மாநிலங்கள் நிறைய உள்ளது
அதை சொல்ல நேரம் தேவை, இப்போ எனக்கு வேறு வேலை உள்ளது!