பொந்துரு

வாடா பங்கு, நல்லா இருக்கிறயா?
@@@@@
எனக்கு என்னடா பங்காளி? சிங்கக் குட்டி மாதிரி என் பையன் சந்துரு.
@@@@@@
அந்தப் பேருக்கு என்னடா அர்த்தம் பங்கு?
@@@@
அடேய் பங்காளி ஊரில் பல பையன்கள் பேரு 'சந்துரு'. நாங்களும் எங்க பையனுக்கு அந்தப் பேரை வச்சிட்டோம்.
@@@@
நான் பல இந்தி ஆசிரியர்களைக் கேட்டுப் பார்த்தேன். அது இந்திப் பேரு இல்லையாம். அது அர்த்தம் இல்லாத பேராம்.
@@@@
அட போடா பங்காளி. இந்திப் பேரு மாதிரி இந்தப் பேரு இருக்குது. அது போதும் எங்களுக்கு.
@@@@@
நானும் உன்னை மாதிரிதான்டா பங்காளி.
உன் பையன் 'சந்துரு'. என் பையன் பேரு 'பொந்துரு'. அழகான இந்திப் பேரு மாதிரியே இருக்குதுடா.
@@@@@
டேய் பங்காளி பச்சமுத்து 'பொந்துரு' புதுமையான பேருடா. உலகத்தில் யாருமே அவுங்க பிள்ளைகளுக்கு வைக்காத அருமையான பேருடா. வாழ்த்துக்கள்டா.
@@@@@
நன்றிடா பங்கு நல்லமுத்து.

எழுதியவர் : மலர் (7-Dec-23, 6:13 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 42

மேலே