ஆண்டாள் நாச்சியார்

ஆண்டாள் நாச்சியார்

மார்கழி திங்கள் பாடிய உயர்திரு மங்கையவள்
மாலை அடையும் மார்கத்தை காட்டிய தையளவள்
மாலையை தொடுத்து அணிந்த இளம் கன்னியவள்
மாசில்லாத மனதோடு சரணடைந்த பெரு நங்கையவள்
மாயவனை கனவில் கண்டு மணந்த ஆரணங்கவள்
மாயையை வென்று மாலின் உள்ளத்தை கவர்ந்தவள்
மானிடரெல்லாம் உய்ய வழி காட்டிய உயரிய மாதவள்
மாயவனின் பாதம் தொழுது அவனை தனதாக்கியவள்
மாலை அடைய வேண்டி அவதரித்த பூதேவியவள்
மாநிலம் போற்றும் சூடிக் கொடுத்த சுடர்கொடியவள்
கோதையவளை பாராட்டி வணங்கி அருள் பெறுவோமே

எழுதியவர் : கே என் ராம் (9-Dec-23, 6:51 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 30

மேலே