கொள்ளையடிக்க வெள்ளைப் போர்வையில் -- நேரிசை ஆசிரியப்பா
கொள்ளையடிக்க வெள்ளைப் போர்வையில் -- நேரிசை ஆசிரியப்பா
****************
(அடி தோறும் ஒன்று மற்றும் மூன்றாம் சீர்களில் எதுகை )
தமிழ் மொழியது அமிழ்தெனப் புகழ்ந்து ;
மொழிபெயர் கெடுத்தும், ஒழித்தும் நின்றனர்!
குளங்கா த்துநின்று வளம்பெ ருக்காது ;
தங்குநீர் இடமெலாம் பங்கு போட்டனர்!
கொள்ளை யடிக்க வெள்ளைப் போர்வையில் ;
தேர்வு இல்லாத தேர்தலைச் சந்தித்து ;
அல்லம் பகலும் செல்வம் சேர்த்தனர்!
நாட்டு ஒற்றுமையில் நாட்டம் இல்லாது ;
வடக்கு தெற்கென தடம் பிரித்து ;
அறவழி மறந்து குறைத்துப் பேசியும் ;
தன்நிலை பெருகிட, மண்வளஞ்
சுரண்டி, மாநில அரங்கையும் கெடுத்தாரே!
***†******
விளக்கம் :- தேர்வு இல்லாத = பள்ளியில் , கல்லூரியில் சேர்ந்து
படித்து தேர்வு எழுதி தேர்வு ஆகாமல்