கனவுகளைப் படிப்பவன் !
கனவுகள்
தூக்கத்தில் வருவதில்லை !
கண்கள் திறந்திருந்தும்
கனவுகள் பிறக்கின்றன !
கனவுகள் முழுக்க
பொய்யும் இல்லை !
கனவுகள் முழுக்க
உண்மையும் இல்லை !
கனவுகள் வண்ணங்கள்
கலந்த பொய் !
கனவுகள் வண்ணங்கள்
கலந்த உண்மை !
கனவுகளை துரத்துபவனுக்கு
வாழ்வும் கனவு
அவனும் கூட
ஒரு கனவு தான் !